ஹரியானா  புதிய தலைமுறை
இந்தியா

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.. தொடங்கியது ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு!

ஜெனிட்டா ரோஸ்லின்

ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் பலத்த பாதுக்காப்புடன் தொடங்கியுள்ளது.

90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக அனல்பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றுமாக பாஜக என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. முதலமைச்சர் நயாப் சிங் சைனி, துஷ்யந்த் சவுதாலா, வினேஷ் போகட் உட்பட 101 பெண்கள், 930 ஆண்கள் என மொத்தம் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த வேட்பாளர்களில் 464 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர்.

மொத்தம்  20, 632 வாக்குச்சாவடிகள் மைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 300- க்கும் அதிக வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. இதன்காரணமாக, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களும், 11 ஆயிரம் சிறப்பு காவல் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தம் 2.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளநிலையில், காலை 7 மணிக்கு தொடங்கி இருக்கும் நிலையில், மாலை 6 மணிக்கு நிறைவடைய உள்ளது. இதன் முடிவுகள் வரும் 8 ஆம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில தகவல்கள்..

  • ஹரியானா சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஹரியானா மாநில முதல்வர் ஷைனி அம்பாலாவில் உள்ள குருத்வாராவில் வழிபாடு வழிபாடு நடத்தி முடித்ததற்கு பிறகு வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை செலுத்த உள்ளார்.

  • சர்கிதாதிரி சட்டமன்றத் தொகுதியில் தனது வாக்கினை செலுத்தினார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த முறை போட்டியிடும் அவர் அதிக அளவில் மக்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள்

  • ஹரியானா மாநிலம் ஜஜ்ஜர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தினர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பார்க்கர்

  • ஹரியானா மாநிலத்தில் மூன்றாவது முறையாகவும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் வாக்கு செலுத்தியதற்கு பிறகு முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டர் ஊடகங்களிடம் பேட்டி