ஹரியானா மற்று ஜம்மு காஷ்மீர் முகநூல்
இந்தியா

அரியணை யாருக்கு? | ஹரியானா மற்று ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைப்பெற்று முடிந்தசூழலில், இன்று காலை காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கையானது துவங்கியுள்ளது.

PT WEB

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைப்பெற்று முடிந்தசூழலில், இன்று காலை காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கையானது துவங்கியுள்ளது.

ஹரியானாவின் 90 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹரியான சட்டப்பேரவை தேர்தலில் 1031 வேட்பாளர்கள் களம் கண்டனர்..

இவர்களில் 464 பேர் சுயேச்சைகள், 101 பேர் பெண்கள். மேலும்,நடந்து முடிந்த வாக்குப்பதிவில் 67.90% வாக்குகள் பதிவான நிலையில், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முன்னதாக பாரதிய ஜனதா கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று முதலமைச்சர் Nayab Singh Saini தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது.. ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 இடங்களுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைப்பெற்றது..

370 ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டபின் நடைபெறும் முதல் தேர்தலான இதில் காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டுக்கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன. இக்கூட்டணிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 20 மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் சூழலில், இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.