hanumankind pt
இந்தியா

மரணக்கிணறில் ஒரு RAP பாடல்.. யூடியூப்பை ஸ்தம்பிக்க வைத்த INDIAN RAPPER! யார் இந்த ஹனுமான்கைண்ட்?

தனது ஒரே டிராக்கினால் யூடியூப்பை ஸ்தம்பிக்க வைத்த தென்னிந்திய ராப் பாடகர் ஹனுமான் கைண்ட். பாடலின் வசனங்களைததாண்டி, அதன் இசை மற்றும் வீடியோவின் தரத்தால் மக்கள் திகைக்க வைத்துள்ளது. ஹனுமான்கைண்டின் இசை வீடியோ உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

PT WEB

- இனியா ஃபிராங்க்

யார் இந்த ஹனுமான்கைண்ட்?

இவரின் உண்மையான பெயர் சூரஜ் செருகட் (Sooraj Cherukat). சூரஜ் செருகட் தன்னுடைய தனித்துவமான பாணி மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பாடல்களுக்கு பெயர் பெற்ற ஒரு முக்கிய மலையாள ராப்பர் ஆவார். கேரளாவைச் சேர்ந்த இவர், சிறுவயதில் டெக்சாஸுக்கு குடிபெயர்ந்து, பின்னர் பெங்களூருக்குத் திரும்பிய அவர் அங்கு தனது இசை வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.

hanumankind

நவம்பர் 2019 இல், சூரஜ் தனது முதல் இசை வீடியோவான 'சவுத்சைடை' YouTube இல் வெளியிட்டுள்ளார். பாப்கார்ன் மங்கி டைகர் என்ற கன்னட திரைப்படத்தின் மாதேவா என்ற TITLE ட்ராகில் இவரும் பாடியுள்ளார். இந்த ட்ராக் கேட்போர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல புகழ்பெற்ற உலகளாவிய தளங்களில் சூரஜ் இடம்பெற்றுள்ளார். சிறப்பம்சமாக, நெட்ஃபிளிக்ஸின் 'Namma Stories - The South Anthem' யில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

hanumankind

இவர் தனது பாடலான பிக் டாக்ஸை (Big Dawgs) ஜூலை 10, 2024 அன்று, "Pushing culture baby, got that product you can't measure." என்ற தலைப்பில் வெளியிட்டார். மூன்று வாரங்களில் இந்த வீடியோ 8 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் 6 லச்சத்திற்கும் மேல் லைக்குகளையும் பெற்று வைரலாகி வருகிறது. யூடியூப்பை மட்டுமல்லாது இன்ஸ்டாகிராமிலும் அதிகமான பார்வையாளர்களை குவித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஹனுமான்கைண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலை 10 அன்று பதிவேற்றிய பாடலின் சிறிய கிளிப் ஒன்று 6.5 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது.

Bijoy Shetty பிஜோய் ஷெட்டியால் இயக்கப்பட்ட இந்த வீடியோ, அதன் பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் வசீகரிக்கும் கதை சொல்லலுக்காக உலகளாவிய வரவேற்பைப் பெற்றுள்ளதையடுத்து ஒரு பாரம்பரிய இந்திய ஃபேர்கிரவுண்ட் ஸ்டண்ட் அரங்கான வெல் ஆஃப் டெத்தின் உள்ளே முழுமையாக படமாக்கப் பட்டுள்ளதையடுத்து இதன் புகழ் மேலும் கணிசமாக உயர்ந்துள்ளது.

hanumankind

தி வெல் ஆஃப் டெத், துணிச்சலான மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் மற்றும் புவியீர்ப்பு மீறும் செயல்களுக்கு பெயர் பெற்றது என்பதால் வீடியோவில் மேலும் சிலிர்ப்பூட்டும் கூறுகளை சேர்க்கிறது. பாரம்பரிய தென்னிந்திய கூறுகளை தற்கால ராப் இசையுடன் கலந்த ஹனுமான்கைண்டின் திறன் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இசை காணொளி Hanumankind’s artistic visionஐ எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் காட்டுகிறது.

hanumankind

சிலர் ஹனுமன்கிண்ட் கேலி செய்து வருகின்றனர் மேலும் அவரது பாடலான பிக் டாக்ஸ் பல கருத்துக்கள் குறிப்பாக இனவெறிக் கருத்துகளையும் பெற்றுவரும் நிலையில், ​​​​இந்திய கோடீஸ்வரரும், வணிக அதிபருமான ஆனந்த் மஹிந்திரா, ராப்பர் சூரஜ் செருகட்டின் சமீபத்திய பாடலை குறித்து ஜூலை 28, 2024 அன்று தனது X தலத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.