இந்தியா

“திருப்பதியில்தான் அனுமார் பிறந்தார்” : தேவஸ்தானம் அறிவிப்பு

“திருப்பதியில்தான் அனுமார் பிறந்தார்” : தேவஸ்தானம் அறிவிப்பு

jagadeesh

அனுமார் பிறந்தது திருப்பதி திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அனுமார் கர்நாடக மாநிலம் ஹம்பி அருகே உள்ள அஞ்சனாத்ரி மலையில் பிறந்ததாக நம்பப்படுகிறது. அனுமார் திருமலையில் உள்ள ஏழு மலைகளில் ஒன்றில்தான் பிறந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ராமநவமி நாளில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வடக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜபாலி தீர்த்தம் என்ற இடத்தின் அருகே ஏழுமலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி என்ற பகுதிதான் அனுமார் பிறந்த இடம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முரளிதர சர்மா தலைமையில் வெவ்வேறு துறை வல்லுநர்கள் அடங்கிய குழுவின் முடிவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்னதாக ஹம்பி பகுதியில் அனுமார் பிறந்தார் என்பதற்கு புராண தகவல்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், கோயில் சிற்பங்கள் உள்ளிட்ட வடிவங்களில் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமான ஆதாரங்கள் கொண்ட புத்தகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.