இந்தியா

ஆக்ஸிஜன் டேங்குகள் நிர்வாகத்தை ஐஐடி அல்லது ஐஐஎம்-யிடம் கொடுக்கலாம் : டெல்லி உயர்நீதிமன்றம்

ஆக்ஸிஜன் டேங்குகள் நிர்வாகத்தை ஐஐடி அல்லது ஐஐஎம்-யிடம் கொடுக்கலாம் : டெல்லி உயர்நீதிமன்றம்

webteam

ஆக்ஸிஜன் டேங்குகளை நிர்வகிப்பது தொடர்பான செயல்பாடுகளை ஐஐடி அல்லது ஐஐஎம் ஆகியவற்றிடம் ஒப்படைக்கலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட கொரோனா தொடர்பான வழக்குகளை விசாரித்த டெல்லி உச்சநீதிமன்றம் கூறியதாவது, “ மத்திய அரசு 700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வாயுவை தரவேண்டும். நீங்கள் அதை செய்யவில்லை என்றால், அவமதிக்கப்படிவீர்கள். தற்போது உங்களின் வேலை இதுதான். ஆனால் உங்களுக்கு அதைச் செய்வதில் நாட்டமில்லை. மத்திய அரசு கண்டிப்பாக ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களின் நிபுணர்களை இதில் புகுத்தி ஆக்ஸிஜன் சேவை எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் ” என்றது.

அதே போல தற்காலிகமாக தகனம் மற்றும் புதைக்குழிக்களை அதிகரிப்பது தொடர்பான பதில்களை டெல்லி மாநில அரசு மற்றும் மத்திய அரசு கொடுக்க வேண்டும் எனவும் கூறியது .

மஹாராஷ்டிராவில் பயன்படுத்தப்படாத ஆக்ஸிஜன் டேங்குகளை டெல்லிக்கு திருப்பிவிடலாம் என்று விசாரணையின் போது கொரோனா பணிகளை கண்காணிக்க டெல்லி உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் அமிகஸ் கியூரி ராஜ்ஷேகர் ராவ் தெரிவித்தார்.

தகவல் உறுதுணை: மின்ட் மற்றும் ஏ.என்.ஐ