இந்தியா

கோளாறா? அமானுஷ்யமா?: தானாகவே இயங்கிய உடற்பயிற்சி இயந்திரம் குறித்து போலீசார் விளக்கம்

கோளாறா? அமானுஷ்யமா?: தானாகவே இயங்கிய உடற்பயிற்சி இயந்திரம் குறித்து போலீசார் விளக்கம்

webteam

உத்தரப்பிரதேசத்தில் தானாகவே இயங்கிய உடற்பயிற்சி இயந்திரம் குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

நண்பர்களுடன் அமர்ந்து அமானுஷ்ய கதைகள் பேசுவது ஒரு வித பொழுதுபோக்காக இருக்கும். அதுவும் இரவு நேரங்களில் அமானுஷ்ய கதைகள் பேசுவது அன்றைய இரவின் தூக்கத்தையும் கெடுக்கும் அனுபவங்களையும் பலர் சந்தித்து இருப்பார்கள். அப்படி ஒரு அமானுஷ்ய கதை ட்விட்டர் மூலமாக போலீசாரை சென்றடைந்தது. அந்த கதைக்கு விளக்கத்தையும் கொடுத்துள்ளனர் உத்தரப்பிரதேச போலீசார்.

உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி பகுதியின் திறந்தவெளியில் உடற்பயிற்சி மையம் ஒன்று உள்ளது. அங்குள்ள ஒரு உடற்பயிற்சி செய்யும் இயந்திரம் தானாகவே இயங்கிக் கொண்டு இருந்தது. ஒரு ஆள் அமர்ந்து உடற்பயிற்சி செய்வதைப் போல முழு பலத்துடன் அந்த இயங்கியது. இதனைக் கண்ட சிலர் அச்சமடைந்தனர். சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அமானுஷ்ய கதைகளை பரப்பிவிட்டனர்.

இந்த கதையும் செய்தியும் ஜான்சி போலீசார் காதுகளுக்குச் செல்ல போலீசார் நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளனர். ஆய்வில் இயந்திரத்தில் அதிகப்படியான கிரீஸ் இருந்து அதன் வெளியேற்றம் காரணமாக இயந்திரம் தானாகவே இயங்கியதாக தெரிவித்துள்ளனர். மற்றபடி, அந்த இயந்திரத்தில் எந்த அமானுஷ்யமும் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளனர்.