இந்தியா

கவுகாத்தி குண்டு வெடிப்பு: நடிகை, ஸ்லீப்பர் செல் கைது

கவுகாத்தி குண்டு வெடிப்பு: நடிகை, ஸ்லீப்பர் செல் கைது

webteam

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த குண்டுவெடிப்பில் டிவி நடிகை மற்றும் உல்பா தீவிரவாத இயக்க ஸ்லீப்பர் செல்-லாக செயல்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் உள்ள வனவிலங்கு பூங்கா சாலையில் கடந்த புதன்கிழமை கையெறிகுண்டு வெடித்ததில் 11 பேர் படுகாயம டைந்தனர். போலீசாரின் சோதனை சாவடியை இலக்காக கொண்டு இந்த குண்டுவீச்சு நடந்தது.

( சைக்கியா)

மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் இந்த பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்து அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

(ராஜகுரு)

இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், டிவி தொடர் நடிகை ஜஹ்னவி சைக்கியா, உல்பா தீவிரவாத இயக்கத்தின் ராஜகுரு ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து, ஏராளமான வெடிபொருட்கள், துப்பாக்கி கைப்பற்றப்பட்டன.

போலீசார் கூறும்போது, ‘’கைது செய்யப்பட்டுள்ள ராஜகுரு, உல்பா அமைப்பின் மூத்த உறுப்பினர். 1986 ஆம் ஆண்டில் இருந்தே அந்த அமைப் பில் இருக்கும் அவர், ஸ்லீப்பர் செல் போல செயல்பட்டு வந்துள்ளார். அவருக்கு நடிகை சைக்கியா உதவி புரிந்துள்ளார்’’ என்று தெரிவித்தனர்.