இந்தியா

குஜராத்: கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் முதல் கைது

குஜராத்: கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் முதல் கைது

JustinDurai
குஜராத்தில் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவாகி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் 'குஜராத் மதச் சுதந்திர சட்டம் -2021' அமலில் உள்ளது. இச்சட்டத்தின்படி ஒருவரை கட்டாயமாக மதம் மாற்றினாலோ அல்லது கட்டாயமாக மதம் மாற்றுவதற்கு துணை புரிந்தாலோ குற்றம்சாட்டப்பட்ட அந்த நபருக்கு 3 ஆண்டு முதல் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த சட்டம் குஜராத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் அமலில் உள்ள நிலையில், அம்மாநிலத்தில் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதல் நபர் கைதாகியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வதோதரா நகரைச் சோ்ந்தவர் சமீா் குரேஷி (வயது 26). இவர் 2 ஆண்டுகளுக்கு முன் ஃபேஸ்புக்கில் தன்னை கிறிஸ்தவராக அறிமுகம் செய்து கொண்டு ஒரு பெண்ணிடம் பழகியுள்ளாா். அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, திருமணத்துக்கு கட்டாயப்படுத்தி உள்ளார். அவரை கிறிஸ்தவர் என்று நம்பயிருந்த அந்தப் பெண்ணுக்கு கடந்த ஆண்டு அவர் இஸ்லாமியர் எனத் தெரியவந்தது.
பின்னர் இஸ்லாமிய முறைப்படி திருமணமும் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு அந்தப் பெண்ணின் பெயரை மாற்றிதாகவும், பின்பு மதம் மாற வேண்டுமென்று சமீர் குரேஷி கட்டாயப்படுத்தியதாக அந்தப் பெண் புகார் தெரிவித்தாார். அதனடிப்படையில், குஜராத் மத சுதந்திர திருத்தச் சட்டம்-2021-இன் கீழ் சமீா் குரேஷி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்'' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.