இந்தியா

என்கவுன்டர் வழக்கு.. 2 வாரத்திற்குள் பதிலளிக்க குஜராத் அரசிற்கு உத்தரவு

Rasus

குஜராத் போலி என்கவுன்டர் தொடர்பான வழக்கில் விசாரணை குழுவின் அறிக்கை மீது 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய குஜராத் அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பி.ஜி.வர்கீஸ் மற்றும் பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என அவர்கள் மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். இதில் வர்கீஸ் கடந்த 2014-ஆம் ஆண்டு காலமாகி விட்டார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சார்பில் அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஹெஎஸ் பேடி தலைமையில்ன குழு சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணை குழுவின் அறிக்கை மீது 2 வார காலத்திற்குள் பதிலளிக்க குஜராத் அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் என்கவுன்டர் வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் கையில் எடுத்திருந்து நரேந்திர மோடி அரசுக்கு சற்று நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.