இந்தியா

குழந்தைக்கு தாய்மொழி கற்பிக்க அமெரிக்க வேலையை உதறிய தம்பதி

webteam

குழந்தைக்கு தாய்மொழி கற்பிப்பதற்காக குஜராத்தைத் சேர்ந்த தம்பதியினர் அமெரிக்காவின் முன்னணி வங்கி சேவை நிறுவனத்தின் பல லட்ச ரூபாய் ஊதியத்துடன் கூடிய வேலையை உதறிவிட்டு தாய்நாடு திரும்பியுள்ளனர்.

தாய்மொழியைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் உலக தாய்மொழி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் தங்கள் குழந்தைக்கு தாய்மொழியைக் கற்றுக்கொடுப்பதற்காக அமெரிக்க வேலையை உதறிவிட்டு தாய்நாடு திரும்பிய தம்பதி குறித்து அறிந்துகொள்வோம்.

குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கௌரவ் பண்டிட் மற்றும் அவரது மனைவி ஷீட்டல். நியூயார்க்கில் உள்ள கோல்ட்மேன் சாஷெட் எனும் வங்கி சேவை சார்ந்த நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் ஊதியத்தில் வேலை பார்த்து வந்தனர். கடந்த 2015ல் இந்த தம்பதியினர் சொந்த ஊர் திரும்பினர். தாய்மொழியான குஜராத்தியை மகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் தங்களின் வேலையை உதறி விட்டு வந்திருக்கின்றனர். தற்போது மூன்றரை வயதான அவர்களது குழந்தை டாஷி, தடையில்லாமல் தாய்மொழியில் உரையாடுவது மனநிறைவைத் தருவதாக பெருமிதம் தெரிவிக்கின்றனர் அந்த தம்பதியினர்.