இந்தியா

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக +2 பொதுத்தேர்வு ரத்து - குஜராத் அரசு அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக +2 பொதுத்தேர்வு ரத்து - குஜராத் அரசு அறிவிப்பு

Sinekadhara

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, கொரோனா சூழலில் தேர்வுகளை நடத்துவதன் நன்மை, தீமைகள் குறித்து விரிவாக விவாதித்த பிரதமர் மோடி, மாணவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்றும், அதை எக்காரணம் கொண்டும் சமரசம் செய்துகொள்ள முடியாது என்றும் கூறி, இந்தாண்டுக்கான சிபிஎஸ்இ +2 பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது குஜராத் அரசு மாநில அளவிலான +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பூபேந்திரசிங் அறிவித்துள்ளார். அதேபோல், பல்வேறு மாநில அரசுகளும் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.