மகனுடன் ஜஸ்வந்த்சிங் பாபோர் ட்விட்டர்
இந்தியா

குஜராத்| வாக்குச்சாவடியைக் கைப்பற்றி இணையத்தில் வைரலாக்கிய பாஜக எம்பி மகன்.. #ViralVideo

குஜராத்தின் தாஹோத் பகுதியில் ஒரு வாக்குச்சாவடியை பாஜக மகன் கைப்பற்றியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் திருவிழாவில், மூன்றுகட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. 3-ஆம் கட்டமாக நேற்று (மே 7) 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், குஜராத்தின் தாஹோத் பகுதியில் ஒரு வாக்குச்சாவடியை பாஜக மகன் கைப்பற்றியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலம் தாஹோத் மக்களவைத் தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் ஜஸ்வந்த்சிங் பாபோர் களமிறக்கப்பட்டு உள்ளார். இவருடைய மகன் விஜய் பாபோர். இவர், நேற்றைய வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடி ஒன்றை அபகரித்து அதை நேரலையில் ஒளிபரப்பியதாகவும், பின்னர் அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அந்தப் பதிவை நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ”வாக்கு ஜிகாத்தா, ராம ராஜ்ஜியமா? நீங்கதான் முடிவு பண்ணணும்” - பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பரப்புரை

அதாவது, இந்த சம்பவம் மஹிசாகர் பகுதி சந்த்ரம்பூர் தாலுகாவைச் சேர்ந்த பர்தம்பூர் கிராமத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில், வாக்களிக்க வரும் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் செய்வதுடன் அங்குள்ள தேர்தல் அலுவலர்களையும் மிரட்டி அவமதித்து, போலி வாக்குப்பதிவும் செய்வது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முந்தைய தேர்தல்களிலும் நடத்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பாஜக உறுப்பினரின் இந்த அராஜகத்தைக் கண்டித்து, தாஹோத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் பிரபாபென் தவியத், மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்டத் தேர்தல் ஆணையரிடமும் புகாரளித்துள்ளார். அவர்கள் இந்தப் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிக்க: “ஜெய்ஸ்ரீராம் எனச் சொல்லாவிட்டால்” - எனக்கூறி சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் நவ்நீத் கவுர் ராணா!