புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் குறைந்தபட்சம் 40 சதவிகித்தை கிராமப்புற பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாடெங்கும் நிலவி வரும் பணத் தட்டுப்பாடு இன்னும் முழுமையாக சீராகவில்லை. இதனிடையே புதிதாக வெளி வரும் ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலும் நகரங்களிலேயே அதிகளவில் புழக்கத்தில் விடப்படுவதாகவும் எனவே கிராமங்களில் அதிகளவில் தட்டுப்பாடு நிலவுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் குறைந்தபட்சம் 40 சதவிகித்தை கிராமப்புற பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் கிராமங்களுக்கு அனுப்பும் புதிய தாள்களில் அதிகளவு 500 மற்றும் அதற்கு குறைவான மதிப்புள்ள தாள்கள் இடம் பெற வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.