ஜி.எஸ்.டி கோப்புப்படம்
இந்தியா

புற்றுநோய் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு?

PT WEB

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதன்பின் பேசிய நிதியமைச்சர், புற்றுநோய் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை 12 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறினார்.

நம்கீன் எனப்படும் மிக்சர், சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் மீதான ஜி.எஸ். டி. வரியும் 18 விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காடாக குறைக்க அனுமதி பெறப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதுதவிர மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு பிரிமீயம் மீதான வரி விகிதத்தை குறைப்பது குறித்து ஆராய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாவும், அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நவம்பரில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.

அதே போன்று, மத்திய அல்லது மாநில அரசுகளுடன் இணைந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் வருமான வரிச்சலுகை பெற்ற கல்வி நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.