இந்தியா

ட்விட்டரில் புதிய சாதனை படைத்த ஜிஎஸ்டி

webteam

ஜூலை 1 ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே வரி என்ற முறையில் ஜிஎஸ்டி வரி அறிமுகமானது. இதுகுறித்து ட்விட்டரில் பத்து லட்சம் ட்வீட்களும் மேல் பதிவாகியுள்ளதால் இது புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.

புதிதாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி, அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை அனைத்தின் விலைவாசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஜிஎஸ்டி புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது, ஜூன் 30 ஆம் தேதி முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை ஜிஎஸ்டி வரி தொடர்பாக பத்து லட்சம் ட்வீட்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஜூலை 1 ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு மட்டும் நிமிடத்திற்கு 1100 ட்வீட்கள் போடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியானது சாமானிய மக்களை மட்டுமல்லாது நெட்டிசன்கள் மத்தியிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

ஜிஎஸ்டி அமலப்டுத்தபட்டு 5 நாட்கள் ஆன பின்பும் ஜிஎஸ்டி தொடர்பான பல்வேறு ட்வீட்கள் தொடர்ந்து போடப்பட்டன. இதில் #GSTCouncil, #GSTIndia, #GST@GoI, #GSTRate, GST, #GST, #GSTsimplified, #IndiaforGST, askGST, #GSTForCommonMan, #HalfCookedGST, #HalfBakedGST போன்ற ஹேஷ்டேக்கள் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்டன. பத்து லட்சம் ட்வீட்களை தாண்டி சமூக வலைதளத்தில் வலம் வரும் ஜிஎஸ்டி, ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது எனலாம்.