இந்தியா

ஜிஎஸ்டி‌யின் அடிப்படை வரி விகிதத்தை உயர்த்த திட்டம்

jagadeesh

எதிர்பார்த்த அளவு வரி வசூலாகாத நிலையில் ஜிஎஸ்டியின் வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த பல மாதங்களாக வரி வசூல் எதிர்பார்த்ததைவிட குறைவாகவே இருந்தது. இதனால், வரி வசூலை அதிகரிக்க ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களில் மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. 

அதன்படி, ஜிஎஸ்டியின் குறைந்தபட்ச வரியான 5 சதவிகிதம் என்பதை 9 முதல் 10 சதவிகிதம் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர 12 சதவிகிதம் வரி வரம்பில் உள்ள சுமார் 243 பொருட்களை 18 சதவிகிதம் வரம்பிற்கு மாற்றவும் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.