ஜிஎஸ்டி வரிவிதிப்பு இழப்பீடாக இதுவரை தமிழகத்திற்கு ரூ.632 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி அமலாக்கத்தைத் தொடர்ந்து, மாநிலங்களுக்கு இழப்பீடாக கடந்த நவம்பர் மாதம் வரை ரூ.24,500 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 632 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவுக்கு அதிக அளவாக 3,271 கோடி ரூபாயும், பஞ்சாப்புக்கு 2,098 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. சிறிய மாநிலமான கேரளாவுக்கு 1,205 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு தரப்பட்டதை விட 2 மடங்கு அதிகம்.