இந்தியா

ஜிஎஸ்டி மசோதா இந்த ஆண்டு நிறைவேற்றப்படும்... அருண் ஜேட்லி உறுதி

ஜிஎஸ்டி மசோதா இந்த ஆண்டு நிறைவேற்றப்படும்... அருண் ஜேட்லி உறுதி

webteam

ஜிஎஸ்டி மசோதா இந்த ஆண்டு நிறைவேற்றப்படுவது உறுதி என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக அதிகளவிலான பணம் வங்கிளுக்கு வந்தடைந்துள்ளதாகவும், இதனால் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் வருங்காலம் என்பது மின்னணுமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதே என்றும் அருண்ஜேட்லி கூறியுள்ளார். கடந்த ஆண்டில் இந்தியா வேகமான வளர்ச்சியைக் கண்டு வரும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்தாகவும், இந்த ஆண்டும் அது தொடரும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் பணவீக்க விகிதத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில் , வட்டி விகிதங்களும் குறைந்து வருவதாகவும் அருண்ஜேட்லி கூறியுள்ளார். மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணத்தாள்களுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு அனுப்பும் நடவடிக்கை திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும், விரைவில் இது நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.