இந்தியா

''குடியுரிமையை பறிக்க சட்டம் கொண்டு வரவில்லை''- அமித்ஷா

''குடியுரிமையை பறிக்க சட்டம் கொண்டு வரவில்லை''- அமித்ஷா

jagadeesh

இந்தியாவில் இருக்கும் எந்தவொரு குடிமகனின் குடியுரிமையை பறிக்கும் வகையிலான ஷரத்துகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இடம்பெறவில்லை என்றும், குடியுரிமை வழங்குவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மா‌நிலம் ஜோத்பூரில் குடியுரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொ‌டங்கி வைத்து பேசிய அவர் குடியுரிமை திருத்தச் சட்டம் சிறுபான்மையினர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டதில்லை என்றும், இந்தச் சட்டம் பற்றி பொதுமக்களிடையே காங்கிரஸ்தான் தவறான தகவல்களை பரப்பி வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

இந்தச் சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் எவ்வளவு விமர்சித்தாலும், அரசு கவலைப்படாது என்றும், சட்டத்தை அமல்படுத்தும் முடிவில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்கப் போவதில்லை என்றும் அமித்ஷா தெரிவித்தார்.