5G service pt desk
இந்தியா

5ஜி அலைக்கற்றை ஏலம்: முதல் நாளில் ரூ.11 ஆயிரம் கோடிக்கு ஏலம் கோரப்பட்டுள்ளதாக தகவல்

webteam

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தேவை கருதி 10,500 மெகா ஹெர்ட்ஸ் அளவுள்ள அலைக்கற்றையை மத்திய அரசு ஏலம் விடுகிறது. இந்த மொத்த ஏலத்தின் மதிப்பு 96,238 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் முதல் நாளிலேயே 11,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அலைக் கற்றைகளை கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

5G service

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளன. இதில், ரிலையன்ஸ் ஜியோ அதிக அளவுக்கு அலைக் கற்றைகளை ஏலம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

5ஜி சேவையை நாடு முழுக்க விரிவாக்க வேண்டியுள்ள நிலையில் அதற்காக நிறுவனங்கள் அலைக் கற்றைகளை ஏலத்தில் எடுக்க உள்ளன. 2022-ல் நடத்தப்பட்ட 5ஜி ஏலத்தில் அரசுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது