இந்தியாவின் 5.5 லட்சம் கிராமங்களுக்கு இன்னும் 2 ஆண்டுகளில் வைஃபை வசதி தரும் திட்டம் வேகமாக வடிவம் பெற்று வருதாக அரசு தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு டிஜிட்டல் கிராமங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இந்தாண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் கிராமங்களுக்கு இந்தாண்டு இறுதிக்குள் வைஃபை வசதி தரப்படும் என தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார். இணையதள இணைப்பின் வேகம் நொடிக்கு 1 gbps என்ற அளவில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.