தாஜ் மஹாலின் வெளித்தோற்ற அழகை குறைந்த கட்டணத்தில் கண்டுகளிக்க ஆக்ராவில் புதிய இடம் அமைக்கப்பட்டுள்ளது.
தாஜ் மஹால் அமைந்துள்ள பகுதியின் அருகே உள்ள மெஹ்தாப் பாக் என்ற பகுதியில் அந்த இடம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை உத்தரப்பிரதேச அமைச்சர் கிரிராஜ் சிங் தர்மேஷ் தொடங்கி வைத்தார். 20 ரூபாய் கட்டணத்தில் தாஜ்மஹாலின் வெளித்தோற்ற அழகை காண இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாஜ் மஹாலின் பிரமாண்ட அழகை பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
தினமும் 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் தாஜ்மஹாலை சுற்றி பார்க்க வருகின்றனர். இதை சுற்றிப்பார்க்க டிக்கெட் விலை 50 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 5 மடங்கு அதிகமாக்கி 250 ரூபாய் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இது சாமானிய மக்களுக்கு மிகவும் சிரமம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.
50 ரூபாய் கட்டணத்தில் தாஜ்மஹாலை வெளியே இருந்து மட்டுமே சுற்றி பார்க்க முடியும். ஆனால் உள்ளே சென்று பார்க்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.