இந்தியா

இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட ரூ.80,000 கோடி தேவை - எஸ்.ஐ.ஐ.

இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட ரூ.80,000 கோடி தேவை - எஸ்.ஐ.ஐ.

JustinDurai

இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட ரூ.80,000 கோடி தேவை. மத்திய அரசிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது எஸ்.ஐ.ஐ. நிறுவனம்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பூசி, இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாவது கட்டம் மற்றும் மூன்றாவது கட்டம் மனித சோதனைகளில் இந்த தடுப்பூசி உள்ளது.

உலகின் மிகப் பெரிய தடுப்பூசிகளைத் தயாரிக்கும் மற்றும் வெகுஜன மக்களுக்காக கொரோனா தடுப்பூசி சோதனைகளை மேற்கொண்டு வரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆதார் பூனவல்லா, தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு முன்னால் உள்ள சவால்களை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பூனவல்லா தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில்,

" அடுத்த ஒரு வருடத்தில் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய அரசுக்கு ரூ. 80,000 கோடி தேவை. ஏனென்றால் இதுதான் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வாங்கி விநியோகிக்க சுகாதார அமைச்சகத்திற்கு தேவை. இதுதான் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்.

நான் இந்த கேள்வியைக் கேட்கிறேன், ஏனென்றால் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் நம் நாட்டின் தேவைகளுக்கு சேவை செய்ய திட்டமிட்டு வழிகாட்ட வேண்டும் என கூறியுள்ளார்.