மொபைல் டவர் புதிய தலைமுறை
இந்தியா

’உலகிலேயே இந்தியாவில்தான் மொபைல் ரீசார்ஜ் கட்டணம் குறைவு’- காங். குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு பதில்

உலகிலேயே இந்தியாவில்தான் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் குறைவாக இருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

PT WEB

உலகிலேயே இந்தியாவில்தான் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் குறைவாக இருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணங்களை சராசரியாக 15 சதவிகிதத்திற்கும் மேல் உயர்த்தியுள்ளன.

ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களுக்குள்ளேயே சுமார் 110 கோடி வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு பெரும் சுமையாக கட்டணத்தை உயர்த்தியுள்ளதை மத்திய அரசும், தொலைத் தொடர்புத்துறையும் கண்டுகொள்ளவில்லை என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம், இந்தக் குற்றச்சாட்டு தவறு. உலகளவில் இந்தியாவில்தான் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சராசரியாக 1.89 அமெரிக்க டாலர், அதாவது 157 ரூபாய் என்ற அளவில் மாத கட்டணம் உள்ளதாகவும், இதில், அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 18ஜிபி டேட்டாவும் வழங்கப்படுவதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவைவிட கட்டணம் அதிகம் எனவும் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.