இந்தியா

விமானப்படைக்கு ரூ5000 கோடியிலான ஆகாஷ் ஏவுகணை திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்

விமானப்படைக்கு ரூ5000 கோடியிலான ஆகாஷ் ஏவுகணை திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்

webteam

5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆகாஷ் ஏவுகணை திட்டத்தை இந்திய விமானப்படைக்கு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இந்திய விமானப்படையின் பலத்தை அதிகபடுத்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை திட்டத்தை விமானப்படைக்கு உபயோகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பிற்கான கேபினட் கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 6 ஆகாஷ் ஏவுகணையை விமானப்படை பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் பயன்படுத்த உள்ளது. இதன் மூலம் ஆகாஷ் ஏவுகணையை பயன்படுத்த வேண்டும் என்ற பாதுகாப்புப் படைகளின் மூன்று ஆண்டு கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சியின் போது ஆகாஷ் ஏவுகணை அமைப்பு சோதனை செய்யப்பட்டது. 

இந்த ஏவுகணையுடன் பிற நாட்டின் ஏவுகணைகளும் பரிசோதிக்கப்பட்டது. இவற்றில் ஆகாஷ் ஏவுகணை மற்ற நாட்டின் ஏவுகணைகளை விட சிறப்பாக செயல்பட்டது. ஆகவே பாதுகாப்பு துறை அமைச்சகம் ஆகாஷ் ஏவுகணை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை விமானப்படையிலிருக்கும் பட்சத்தில் பாலகோட் மாதிரியான பதில் தாக்குதகளுக்கு முக்கிய உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.