இந்தியா

விமான நிலையங்களில் உள்ளூர் மொழி அறிவிப்பு கட்டாயம்: மத்திய அரசு

விமான நிலையங்களில் உள்ளூர் மொழி அறிவிப்பு கட்டாயம்: மத்திய அரசு

webteam

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், உள்ளூர் மொழியிலும் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. பெரும்பாலான விமான நிலையங்களில் இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது. அந்தந்த மாநில மொழிகளிலும் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. 

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்திய விமான நிலைய ஆணையம் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பிய அறிக்கை யில் இந்தி, ஆங்கிலத்தை அடுத்து உள்ளூர் மொழியிலும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. 

இந்நிலையில் மத்திய சிவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவின் உத்தரவுபடி, விமான நிலையங்களில் உள்ளூர் மொழி யிலும் பொது அறிவிப்பை வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் விமான நிறுவனங்களுக்கும் இத்தகவலை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.