இந்தியா

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

Rasus

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை பாயும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார்.

மாநிலங்களவையில் இதுகுறித்து பேசிய அவர், சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்த ரவிசங்கர் பிரசாத், மத்திய அரசு எடுத்த முயற்சிகளால், ஒரேநேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு மெசேஜ் அனுப்பும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார். மேலும் அனுப்பப்படும் தகவல் ஃபார்வேர்டு செய்யப்பட்டது என்பதை தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாட்ஸ்அப்பில் பரவும் வதந்தியால் நாட்டின் பல இடங்களில் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகின்றன. சில நேரங்களில் கும்பலின் தாக்குதலால் எந்தவித குற்றமும் புரியாதவர் கூட பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இதற்கு முழு முதற் காரணம் வாட்ஸ்அப் வழியாக பரப்பப்படும் வதந்திதான். எனவே வாட்ஸ்அப் வழியாக பரவும் வதந்திகளை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.