இந்தியா

ரஃபேல் ஒப்பந்‌தத்திலிருந்து ஊழல் தடுப்பு பிரிவு நீக்கமா?

ரஃபேல் ஒப்பந்‌தத்திலிருந்து ஊழல் தடுப்பு பிரிவு நீக்கமா?

rajakannan

ரஃபேல்‌ ஒப்ப‌ந்தத்தில் இருந்து ஊழல் ‌தடுப்புக்கா‌ன முக்கிய ‌பிரிவுகளை மத்‌திய அரசு நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது‌. தி ‌ஹிந்து பத்திரிகையில் வெளியான கட்டுரையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இருநாடுகளுக்கு இடையே செய்யப்படும் ஒப்பந்தங்களுக்கான விதிமுறைகளின் படி(DPP), 2016ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி பிரான்ஸ் - இந்தியா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, டசல்ட் நிறுவனம் ரஃபேல் விமானங்களை வழங்கும். அதேபோல், எம்.பி.டி.ஏ பிரான்ஸ் நிறுவனம் இந்திய விமானப்படைக்கான ஆயுதங்களை வழங்கும். 

ரஃபேல் குறித்த இந்தியா - பிரான்ஸ் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தாகவிருந்த சில நாட்களுக்கு முன் செப்டம்பர் மாதத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் த‌லைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில்‌ கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாதுகாப்பு கொள்முதல் விதிமுறைகளில் 8 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஆகஸ்ட் 24ம் தேதி இந்த ஆவணங்களுக்கு ஒப்புதல் அளித்த பின்னரே மனோகர் பாரிக்கர் தலைமையிலான குழு ஒப்புதல் அளித்தது. 

முறைகேடாக ஆதாயம் பெற்றால் ‌அபராதம் விதிப்பது, தரகர், தரகுத் தொகை, நிறுவனக் கணக்குகளை ஆய்வு செய்யும் அதிகார‌ம் உள்ளிட்ட முக்கிய விதிகள் பாதுகாப்பு கொள்முதல் கொள்கையில் நிரந்தரமாக இடம்பெற்றிருந்ததாகவும், ஆனால், ரஃபேல் ஒப்பந்தத்தில் ‌இந்‌த விதிகள் நீக்கப்பட்டதா‌கவு‌ம் ஹிந்து வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. பிரான்சுடனான ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய ‌அரசுத் தரப்பிலிருந்து முன்‌னெப்போதும் இல்லாத வகையில் சலுகைகள் வழங்கப்பட்டதாக அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ரஃபேல் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு கருதி பணப்பரிமாற்றங்களை தனிக்கணக்கு மூலம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிதித்துறை ஆலோசகரின் பரிந்துரையையும் அரசு புறக்கணித்து விட்‌டதாக அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசு ஆலோசகர் எம்.பி.சிங் , விமானப்படைக்கான நிதிப்பிரிவு தலைவர் ஏ.ஆர்.சூல், கூடுதல் செயலாளர் மற்றும் கொள்முதலுக்கான மேனேஜர் ராஜீவ் வர்மா ஆகிய மூன்று பேர் கொண்ட இந்தியாவிற்கான பேச்சு வார்த்தை குழுவும், கொள்முதல் விதிமுறைகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.