இந்தியா

மக்களவையில் இன்று தாக்கல் ஆகிறது முத்தலாக் மசோதா

மக்களவையில் இன்று தாக்கல் ஆகிறது முத்தலாக் மசோதா

webteam

முத்தலாக் நடைமுறையை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வழி செய்யும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. 

இஸ்லாமிய பெண்களின் வாழ்வை பாதிக்கக்கூடிய முத்தலாக் முறையை நீக்க சட்டம் இயற்றலாம் என உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், அதற்கான மசோதாவின் அம்சங்கள் குறித்து மத்திய அரசு ஆலோசித்தது. கடந்த வாரங்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முத்தலாக் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. முன்னதாக முத்தலாக் முறையை சட்டவிரோதமாக அறிவிக்கும் மசோதாவுக்கு அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது