கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலங்கை, இந்தியாவை தொடர்ந்து சீனாவிடமும் கடனுதவி கேட்டுள்ளது.
இலங்கை அரசிடம் அன்னியச்செலாவணி தட்டுப்பாடு நிலவுவதால் உணவு, எரிபொருள், மருந்து போன்ற அவசியப் பொருட்களை கூட வாங்க இயலாத நிலை உள்ளது. இதை சமாளிக்க இந்தியாவிடம் இலங்கை கடந்த வாரம் 100 கோடி டாலர்கள் அதாவது 7,500 கோடி ரூபாய் கடன் பெற்றது. இந்நிலையில் சீனாவிடமும் 250 கோடி டாலர்கள் அதாவது 19,000 கோடி ரூபாயை கடனுதவியை இலங்கை கோரியுள்ளது.
இலங்கை கேட்ட தொகையை அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. இதற்கிடையே இலங்கைக்கு உதவி அளிக்கும்போது அந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள மாட்டோம் என இலங்கைக்கான சீன தூதர் கூறியுள்ளார். இந்தியா, சீனா தவிர சர்வதேச நிதியத்திடமும் இலங்கை கடனுதவி கோரியுள்ளது