இந்தியா

பறவைக் காய்ச்சல் அபாயம்; இந்திய கோழிகளுக்கு நேபாளத்தில் தடை

webteam

இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சியை இறக்குமதி செய்ய நேபாள அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது.


மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் திடீரென காக்கைகள் இறந்து கிடந்தன. இதனையடுத்து அதனை பரிசோதித்தபோது அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கேரளாவில் உள்ள பண்ணையில் உள்ள வாத்துகளுக்கும் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு, பறவைக்காய்ச்சல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

அந்த நடவடிக்கையின்படி இந்தியாவில் கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சல், ஹரியானா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில்,இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சியை இறக்குமதி செய்ய நேபாள அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது.