நாடாளுமன்றம் எக்ஸ் தளம்
இந்தியா

மழைக்கால கூட்டத்தொடர் | 6 புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்யும் மத்திய அரசு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா உள்பட 6 புதிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Prakash J

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முழு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதைத் தொடர்ந்து இந்த கூட்டத்தொடரில் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா உள்பட 6 புதிய மசோதாக்களை மத்திய அரசுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதி மசோதா தவிர, சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்குவதற்காக, தற்போதுள்ள விமான சட்டம் 1934ல் திருத்தம் செய்து அதற்கு பதிலாக பாரதிய வாயுயான் விதேயக் 2024 மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல், பாரதிய வாயுயான் விதேயக் 2024, சுதந்திரத்துக்கு முந்தைய கால சட்டத்தை மாற்றுவதற்கான கொதிகலன்கள் (பாய்லர்கள்) மசோதா, காபி (மேம்பாடு மற்றும் வளர்ச்சி) மசோதா, ரப்பர் (மேம்பாடு மற்றும் வளர்ச்சி) மசோதா உள்ளிட்ட 6 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

இதையும் படிக்க: ”அரசு ஆதரவு மதவெறி”-உ.பி. கன்வார் யாத்திரை.. வழியில் உள்ள கடைகளில் உரிமையாளர் பெயர்களை எழுத உத்தரவு!