இந்தியா

மூணாறுநிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு,நிலம்வேண்டும்: நேரில் சந்தித்த திருமாவளவன்

மூணாறுநிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு,நிலம்வேண்டும்: நேரில் சந்தித்த திருமாவளவன்

Veeramani

கேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடு, ஒரு ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ மூணாறு நிலச்சரிவில் சிக்கி 90க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு. இன்று கேரள மாநிலம் மூணாறில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வீடு கட்டித்தர வேண்டும், ஒரு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், கல்வி சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.