இந்தியா

கால்நடை விற்பனையில் மத்திய அரசின் புதிய விதிமுறைகள் என்னென்ன?

கால்நடை விற்பனையில் மத்திய அரசின் புதிய விதிமுறைகள் என்னென்ன?

webteam

கால்நடைகள் விற்பதில் பல புதிய விதிமுறைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

கருவுற்ற பசுக்களை வாகனங்களில் அடைத்து கொண்டு செல்லக் கூடாது. கால்நடைகள் சந்தைகளுக்கு கொண்டு வரப்படும்போது
துன்புறுத்தல் கூடாது. மாடுகளுக்கு ஊசி போட்டு பால் கறக்கவும் மத்திய அரசு தடைவித்திருக்கிறது. கன்றுகளை விற்பனைக்காக
சந்தைக்கு கொண்டு வரக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. கால்நடைகளை வித்தை காட்ட பயன்படுத்தவும் தடை
விதிக்கப்பட்டுள்ளது. 

கால்நடைகள் அடையாளத்துக்கு சூடு வைப்பது, காதை வெட்டுவது கூடாது. கால்நடைகள் விற்பனையை கால்நடை சந்தை
கமிட்டி உறுப்பினர் செயலர் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கால்நடை உரிமையாளரின் எழுத்துப்பூர்வ அனுமதி கடிதமின்றி
விற்பனை செய்யக் கூடாது. சந்தைக்கு விற்பனைக்கு வரும் கால்நடையின் உரிமையாளர் முகவரி தெரிவிக்க வேண்டும்.
கால்நடை உரிமையாளரின் அடையாளச் சான்றும் அளிக்கப்பட வேண்டும். மேலும் கால்நடையின் அடையாளங்களும் தெரிவிக்க
வேண்டும் என புதிய விதிமுறை கூறுகிறது.