இந்தியா

கூகுளின் மொபைல் பணப்பரிமாற்ற சேவை - இன்று அறிமுகம்

webteam

மொபைல் ஃபோன் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் சேவையை கூகுள் நிறுவனம் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தவுள்ளது. 

மொபைல் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் சேவையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் இன்று அறிமுகப்படுத்துகிறார். டெஸ் என்ற இச்சேவை இந்திய சந்தைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்களுடன் இணைந்து இவ்வகை சேவை வழங்குவது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான அனைத்து வங்கிகளும் இந்த ஆப்-பில் சர்ப்போர்ட் செய்யும் என்றும், விமான, சினிமா, உணவக உள்ளிட்டவகளுக்கான முன்பதிவுகளும் இந்த ஆப் மூலமாக செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.