இந்தியா

இன்றைய கூகுள் டூடுளில் 'ஒரு விரல் புரட்சி' !

இன்றைய கூகுள் டூடுளில் 'ஒரு விரல் புரட்சி' !

webteam

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குவதையொட்டி சிறப்பு 'ஒரு விரல் புரட்சி' டூடுளை கூகுள் இந்தியா உருவாக்கி மாற்றி அமைத்துள்ளது.

முக்கிய தினங்களை சிறப்பு டூடுள் மூலம் சிறப்பிப்பது கூகுளின் வழக்கம். அதன்படி நாட்டின் 17-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்குவதை அடுத்து கூகுள் இந்தியா சிறப்பு டூடுளை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று‌ நடைபெறுகிறது.‌ 

வாக்குப்பதிவு தொடங்குவதையொட்டி, அதனை வரவேற்கும் விதமாக கூகுள் நிறுவனம் தனது 'டூடுளை' மாற்றி அமைத்துள்ளது. GOOGLE  என்ற வார்த்தையில் ‘ஒரு விரலில் மை’ உள்ளது போன்ற வாக்களிக்கும் முறையை விளக்குகின்றது. மேலும் இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக கூகுளின் 'ஒரு விரல் புரட்சி' டூடுள் அமைந்துள்ளது. இந்த சிறப்பு டூடுள் நாட்டில் முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு பெரிதும் உதவக்கூடிய தகவல்களுடன் உள்ளன என்பது இதன் கூடுதல் சிறப்பு.

'ஒரு விரல் புரட்சியை' அடையாளமாக வைத்து 'டூடுள்' வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்களிப்பது எப்படி என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளது.