இந்தியா

டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்..!

டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்..!

webteam

ஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருபவர் சர்வபள்ளி டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன். சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் இவர். மேலும் இரண்டாவது குடியரசுத் தலைவர். தன் முதல் பணியினை இவர் சென்னை மாநில கல்லூரியில் துவங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்டு வரை சென்று நீண்ட காலமாக தத்துவ பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் பிறந்த இராதாகிருஷ்ணன் "சர்" பட்டத்தை பெற்றவர். இராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயின்று ஆசிரியர் ஆனார். இராதாகிருஷ்ணன் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5 தேதியை 1962 ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து ராஜினாமா செய்த மத்திய அமைச்சர்களை குடியரசுத்தலைவராக இருந்த இராதாகிருஷ்ணன் ஏற்க மறுத்தார். சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என அறிவித்த போது, அந்த அறிவிப்புக்கு வலுவாக எதிர்ப்பு தெரிவித்தார் இராதாகிருஷ்ணன்.

இந்நிலையில் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல், டாக்டர் இராதாகிருஷ்ணனின் தோற்றத்தைப் போல உலக உருண்டையில் கண்ணாடியை மாட்டிக்கொண்டு, இயற்பியல், வேதியியல், இசை, கணிதம், வானியல்,விளையாட்டு போன்ற பல துறைகளைச் சார்ந்த குறியீட்டுச் சின்னங்களால் சூழப்பட்ட இலட்சினையை போட்டுக் கொண்டாடி வருகிறது.