இந்தியா

டிஜிட்டல் சேவைக்கு ஸ்மார்ட்போன் விலை குறைய வேண்டும்: சுந்தர் பிச்சை

webteam

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விலை குறைந்தால் மட்டுமே முழுமையான டிஜிட்டல் சேவை சாத்தியமாகும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, கருத்து தெரிவித்துள்ளார்.

கராக்பூர் ஐஐடியில், எதிர்காலத்திற்காக ஒரு பின்னோக்கிய பயணம் என்ற தலைப்பில் பேசிய அவர், அடிப்படை ஸ்மார்ட்போன்கள் விலையை குறைத்தால் மட்டுமே இந்தியா உலக நாடுகள் மத்தியில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறும் என்றார்.

இந்தியாவில் தற்போதைக்கு சுமார் 200 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்கள் உள்ளனர். உள்ளூர் மொழிகளுக்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களை திருத்தியமைத்து, இணைய இணைப்புகளின் தரத்தை மேம்படுத்தினால் அனைவருக்கும் டிஜிட்டல் சேவை திட்டம் வெற்றி பெறும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனம் பல திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறது என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

ஐஐடி மாணவர்களிடம் உங்களுக்கு பிடித்ததை விரும்பி செய்யுங்கள். வெற்றி பெரும் வரை முயற்சி எடுங்கள் என பல அறிவுரைகளை வழங்கினார் சுந்தர் பிச்சை.

சுந்தர் பிச்சை கராக்பூர் ஐஐடியில் உள்ள நேரு அரங்கில் தங்கி 1994-ம் ஆண்டு பிடெக் படிப்பை முடித்தவர். கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவராக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.