விபத்தில் சிக்கிய சரக்கு ரயில் புதிய தலைமுறை
இந்தியா

மேற்கு வங்க ரயில் விபத்து - 5 பேர் பலி; இன்னும் பலி எண்ணிக்கை உயரலாம்?

Jayashree A

மேற்கு வங்க மாநிலம், நியூ ஜல்பைகுரி அருகே சரக்கு ரயில் மீது கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மோதியுள்ளது. தற்போதுவரை கிடைத்த தகவலின்படி, இவ்விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

டார்ஜிலிங் மாவட்டம் ஜல்பைகுரி அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மிக மோசமாக நடந்துள்ள இந்த விபத்தில் ஏராளமானோர் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

TrainAccident | WestBengal | KanchenjungaExpress

இவ்விபத்தில் இறந்தவர்கள் பற்றியோ காயமடைந்தவர்கள் பற்றியோ சரியான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இவ்விபத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார். விரைவில் அவர் சம்பவ இடத்திற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு மருத்துவக்குழு விரைந்துள்ளது. மேலும் மீட்பு படையினர், தீயனைப்பு துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளை மீட்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், சரக்கு ரயில் சிக்னலை மதிக்காமல் சென்றதால் இவ்விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த இபத்து குறித்து முழு தகவல் இன்னும் வெளிவரவில்லை. தற்போதைக்கு ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதன்படி 033-23508794, 033-23833326 என்ற அவசர கால எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.