தங்கம் மற்றும் பங்கு சந்தை புதியதலைமுறை
இந்தியா

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. பங்குசந்தை நிலவரம் என்ன?

இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 6385 க்கு விற்கப்படுகிறது. அதன்படி ஒரு சவரன் ரூ51,080க்கு விற்கப்படுகிறது.

Jayashree A

இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 6385 க்கு விற்கப்படுகிறது. அதன்படி ஒரு சவரன் ரூ51,080க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் 24 கேரட் தங்கத்தின் விலையும் ரூ.33 குறைந்து ஒரு கிராம் 6965 ரூபாயாக விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலையானது கிராமிற்கு 0.50 விலை குறைந்து ஒரு கிராம் 89 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மேலும் தங்கத்தின் விலையானது குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு சந்தை இன்று ஏற்றத்துடன் காணப்படுகிறது... அதன்படி தேசிய பங்குசந்தையான நிப்டி 115 புள்ளிகள் அதிகரித்து 24950-க்கு வர்த்தகமாகிறது ...

தங்கம்

மேலும் மும்பை பங்கு சந்தையானது 356 புள்ளிகள் அதிகரித்து 81718க்கும் வர்த்தகமாகிறது.

அதே போல் Bank nifty யானது 322 புள்ளிகள் அதிகரித்து 51711 க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

உலக சந்தையைப் பொருத்தவரை பெரும்பாலான நாடுகள் இன்று இறங்கு முகத்துடன் காணப்படுகிறது. இதற்கு காரணம் மாதத்தின் இறுதி நாள் மற்றும் முதலீட்டாளார்களின் லாபத்தை பார்த்ததால் உலக பங்கு சந்தையானது சற்று இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்திய பங்கு சந்தையை பொருத்தவரை ஆக்ஸிஸ் வங்கி HDFC போன்ற வங்கிகளின் பங்குகள் சற்று இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆனால் Dr.Reddu , genpact போன்ற பங்குகள் லாபத்தை ஈட்டு வருகிறது.