தங்கம் மற்றும் பங்குச் சந்தை புதியதலைமுறை
இந்தியா

மீண்டும் ஷாக்.. கண்ணாம்மூச்சி ஆடும் தங்கம் விலை.. இறக்கத்தை சந்தித்து வரும் பங்குசந்தை!

இன்று ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராம் 95 ரூபாய் அதிகரித்து 6565க்கு விற்கப்படுகிறது.

Jayashree A

இன்றைய தங்கத்தின் விலை

தங்கமானது சில வாரங்களாக குறைந்து, கூடி என்று கண்ணாம்மூச்சி ஆடி வருகிறது. தங்கத்தின் விலையானது அதிகரிக்கும் பொழுது ஆகா... அதிகரிக்கின்றதே என்று நினைக்கும் பொழுது சற்று குறைகிறது. அப்பாடா குறைந்தது... இன்னும் குறைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும்பொழுது அதிகரிக்கின்றது. இந்த ஏற்ற, இறக்கம் தங்கம் வாங்குபவர்களுக்கு தேக்கத்தை உண்டு செய்கிறது.

இன்று ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராம் 95 ரூபாய் அதிகரித்து 6,565க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 24 கிராம் தூய தங்கத்தின் விலை கிராமிற்கு 104 ரூபாய் அதிகரித்து 7,162 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம்

வெள்ளியின் விலையானது கிராமிற்கு ஒரு ரூபாய் அதிகரித்து 88.50 பைசாவிற்கு விற்பனையாகிறது.

பங்கு வர்த்தகம்

இன்று பங்கு சந்தை சற்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி தேசிய பங்கு சந்தையானது 37 புள்ளிகள் இறக்கம் கண்டு 24,310 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்கு சந்தை 122 புள்ளிகள் இறக்கம் கண்டு 79,530 ற்கு வர்த்தகமாகி வருகிறது.

bank nifty யானது 255 புள்ளிகள் சரிவைக்கண்டு 50323 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதானி

இன்று அதானி பங்குகளின் விலையில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இறக்கத்தை கண்டு வந்த அதானி எண்டர்பிரைஸஸ், அதானி ஸ்போர்ட்ஸ், அதானி க்ரீன், அதானி பவர் போன்ற அதானி பங்குகள் மீண்டும் உயரலாம் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் அதனை கவனித்து வருகின்றனர்.