தங்கம் புதிய தலைமுறை
இந்தியா

பட்ஜெட் 2024 - 25 | சுங்கவரி குறைவு... குறைந்தது தங்கம் வெள்ளி விலை!

Jayashree A

தங்கம் விலை உயர்வுக்கு காரணம்

கடந்த சில வருடங்களாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து, 22 கேரட் தங்கத்தின் விலையாது சவரன் ஒன்று ரூபாய் 55,000ஐ கடந்து விற்பனை ஆனது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், அரசாங்கத்தின் சுங்க வரியும் அதில் ஒன்று.

தங்கம், வெள்ளி போன்ற உலோகத்தின் சுங்க வரியானது 15% இருந்ததால், தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது. மேலும் ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் பங்குச்சந்தைகளில் தங்கத்தின் முதலீடு போன்ற காரணங்களாலும் தங்கத்தின் விலையானது கணிசமாக உயர்ந்து வந்தது.

தங்கம்

தங்கவிலை சற்று இறக்கத்திற்கான காரணம்

அதே சமயம் அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதத்தில் மாற்றம் மற்றும் சீனா போன்ற சில நாடுகள் தங்கம் இறக்குமதி செய்வதை தற்காலிக நிறுத்தம் போன்றவற்றின் காரணமாக அவ்வபோது தங்கத்தின் விலை சற்று சரிவை சந்தித்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்ததை அடுத்து, மீண்டும் தங்கமானது சாமாணியர்களுக்கு எட்டாக்கனியாகி இருந்தது.

வரிவிதிப்பில் மாற்றம்

இந்நிலையில் 2024-25 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். அதன்படி தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்க வரி விகிதத்தை 15 % என்பதிலிருந்து 6% என்றும் பிளாட்டிணாத்திற்கு சுங்க வரி 6.4% என்றும் குறைக்கப்பட்டது.

இந்த வரி விகிதம் மாற்றத்தால் தங்கத்தின் விலையானது சரிந்து வருகிறது. தற்போதைக்கு22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.15 விலை குறைந்து 6,810 ஆகவும், ஒரு சவரன் ரூ 54,480க்கும் விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளியின் விலையும் 40 பைசா குறைந்து கிராம் ஒன்று ரூ.95.60-க்கு விற்கப்படுகிறது.

இருப்பினும் தங்கம் விலை அடுத்த இரண்டு மணி நேரத்தில் இன்னும் வேகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை தங்கநகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி இதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.