கோவாவில் மே 9 லிருந்து மே 23 வரை என 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறும் போது, “ மே 9 லிருந்து மே 23 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மருத்துவத்தேவைகள் உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மருந்தகங்கள் காலை 7 மணிமுதல் மதியம் 1 மணி வரை அனுமதிக்கப்படும். உண்வகங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆர்டர் வாயிலாக உணவைப் பெற்றுக்கொள்ளலாம். ஊரடங்கு குறித்த கட்டுபாடுகளுடன் கூடிய விவரம் நாளை வெளியிடப்படும்” என்றார்.
கோவாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நகரில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் விகிதம் 51.65 சதவிகிதமாக உள்ள நிலையில், 6,769 நபர்களுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3,496 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.