இந்தியா

கோவா முதல்வர் உடல்நிலை மோசமானதாக தகவல்!

கோவா முதல்வர் உடல்நிலை மோசமானதாக தகவல்!

webteam

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிகர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (63) கடந்த அக்டோபர் மாதம் கணையp புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் பானாஜியில் மாண்டோவி நதியின் குறுக்கே அமையும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் மூக்கில் குழாய் பொருத்தப்பட்டிருந்தது. உடல் மெலிந்த நிலையில் காணப்பட்ட அவர் ஒருவரின் துணையுடன் குறிப்பிட்ட தூரம் நடந்து சென்றார். பின்னர் கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்த வந்த அவர், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். 

இதற்கிடையே, பாஜக எம்.எல்.ஏ பிரான்ஸிஸ் டி சோசா சமீபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து, பாஜக பெரும்பான்மையை இழந்துவிட்டது என்று கூறி, ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது. இது தொடர்பாக கவர்னருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. 

இந்நிலையில், மனோகர் பாரிகரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன. இதனால் பாஜக மூத்த தலைவர்கள் கோவா விரைந்துள்ளனர். இன்று மாலை பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறலாம் எனவும் பாரிக்கருக்குப் பதில் யாரை முதலமைச் சராக்கலாம் என்று அவர்கள் ஆலோசிப்பார்கள் என்றும் தெரிகிறது. இதன் காரணமாக பாஜக எம்.எல்.ஏக்கள் யாரும் கோவாவைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் அந்தக் கட்சி கூறியுள்ளது. இதனால் கோவா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.