mumbai face book
இந்தியா

’ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..!” கைகள் துண்டிக்கப்பட்டாலும் துவளாத தன்னம்பிக்கை; சாதனை படைத்த மாணவி!

ஜெனிட்டா ரோஸ்லின்

மின்சார விபத்து ஒன்றில் கை துண்டிக்கப்பட்டு துவண்டு போன சூழலிலும், சோர்ந்து விடாமல் உழைத்த மும்பையை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் பெண், ஐசிஎஸ்சி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92% மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.

மும்பையை சேர்ந்தவர் அனம்தா அகமது, வயது 15. இவருக்கு, 13 வயதாக இருக்கும்போது, அலிகர் என்ற இடத்தில் இருந்த தனது உறவுக்கார நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்ப்பாராத விதமாக 11KV மின்கம்பியை அனம்தா தொடவே, ஏற்பட்ட விபத்தால் பெரும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இவரின் வலது கை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இடது கையும் 20% மட்டுமே இயக்கத்தினை பெற்றிருந்தது. இந்நிலையில், நாட்களுக்கு மேல் படுத்தப்படுக்கையான இவர் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் அனம்தா தன்னம்பிக்கையை விட்டுவிடவில்லை. தன் வாழ்வின் கடினமான நாட்களை கடந்து வந்த அனம்தா , விடமுயற்சியுடன் தொடர்ந்து நாட்களுடன் போராடி வந்துள்ளார்.

அனம்தா ஐசிஎஸ்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தநிலையில், பொதுத்தேர்வினையும் எழுதியுள்ளார். இந்நிலையில், நேற்று வெளியாக ஐசிஎஸ்சி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92% மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளார். மேலும், அனைத்து பாடப்பிரிவுகளிலும் நல்ல மதிபெண்களை பெற்றுள்ள இவர், இந்தி பாடத்தில் 98% மதிப்பெண் பெற்று முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், வாழ்வின் நெருக்கடி நாட்களையும் கடந்து வந்த அனம்தா தற்போது வெற்றிக்கனியை பறித்திருப்பது அவருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.. எனவே, இவரது குடும்பத்தினர், பள்ளி நிர்வாகம் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை அனம்தாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அனம்தா தெரிவிக்கையில், “ எனக்கு விபத்து ஏற்பட்டதை அடுத்து, நான் படிப்பிலிருந்து 1 அல்லது 2 வருடங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என என் பெற்றோரிடத்தில் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், நான் அதை செய்ய விரும்பவில்லை.

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் நான் நினைத்த முதல் விஷயம் எப்படியாவது எனது இடது கையை முழுவதுமாக செயல்பட வைக்கவேண்டும் என்பதுதான். ஆனால், நான் பல பயிற்சிகளை மேற்கொண்ட போதிலும் இடது கைகளால் எழுதுவது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

எனவே, ஒருவர் எழுவதற்கென்றே எனக்கென நியமிக்கப்பட்டார். மேலும், மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பலர் பலத்த தீக்காயங்களால் வந்ததை நான் பார்த்தேன், அப்போது நான் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ஷ்டசாலி என்று நினைத்து கொண்டேன்.” என்று தெரிவித்தார்.

இது குறித்து மாணவி பயிலும் பள்ளியின் முதல்வர் தெரிவிக்கையில், “அனம்தா அகமது, நன்கு படிக்கும் திறமையான மாணவி. அவள் கட ந்த வந்த பாதையில், வேரொருவராக இருந்திருந்தால் மனச்சோர்வுக்கு உள்ளாகியிருக்கலாம். இருப்பினும், இவை அனைத்து அவள் கடந்து நேர்மறையான எண்ணத்தின் மூலமாக தற்போது இந்த வெற்றியை கண்டுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.