இந்தியா

“என்னால் முழு நேரமும் நடிக்க முடியாது” - பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்

“என்னால் முழு நேரமும் நடிக்க முடியாது” - பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்

webteam

தான் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என நடிகையும் பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

நடிகை காயத்ரி ரகுராம் சார்ளி சாப்ளின், விசில் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர். இவர் தேசிய அளவிலான பாஜகவில் இளைஞர் பிரிவில் உறுப்பினராக இருந்து வந்தார். இவருக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் அரசியிலில் இருந்து விலகுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள பதிவில்,  “வெறும் வாக்குவாதங்களும் மற்றவர்களைக் குறை சொல்வதுமாக அரசியல் களம் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. சிறுபிள்ளை தனமாக இருக்கிறது.

சினிமாவை விட அரசியலில் அதிக நடிகர் உள்ளனர். போராளிகள், தலைவர்கள், தொண்டர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் போலியாகவே உள்ளனர். என்னால் முழு நேரமும் நடித்து கொண்டிருக்க முடியாது. நேரம் வரும்போது உண்மையுடனும், விஸ்வாசத்துடனும் இருப்பேன்.

என்னை பொறுத்தவரை அரசியல் என்பது வில்லன் கதாபாத்திரமே. பேராசை, சுயநலம் என எல்லாம் எதிர்மறை எண்ணங்களாகவே உள்ளது. நான் அரசியலில் இருந்து விலகி,  வெளியிலிருந்து எது சரி, எது தவறு ஆராய்ந்து கற்று கொள்ள விரும்புகிறேன். இப்போதைக்கு நான் எந்த  ஒரு கட்சிக்கும் ஆதரவு இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு” என்று காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.