அம்பானி, அதானி ட்விட்டர்
இந்தியா

உயர்ந்த சொத்துகள்.. ஆசிய பணக்காரர் பட்டியலில் முதல் இடம்! அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிய அதானி!

Prakash J

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி இந்திய பணக்காரர் என்ற பட்டத்தை மீண்டும் கெளதம் அதானி பெற்றுள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் டாலர் 97.6 பில்லியன் நிகர மதிப்புடன்12வது இடத்தைப் பிடித்துள்ள அதானி, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக மீண்டும் உருவெடுத்துள்ளார். அதேநேரத்தில், முகேஷ் அம்பானி 97 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார்.

அதானி

அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிக்கை வெளியிட்டது. பங்கு மதிப்பில் உயர்வைக் காட்டியதோடு, இதனால் பெரும் இழப்பை எதிர்கொண்ட அதானி குழுமம், பணக்காரப் பட்டியலிலும் இறக்கத்தைச் சந்தித்தது. இதனால், ஆசிய பணக்காரர் பட்டியலிலும் இறக்கத்தைச் சந்தித்தார். ஆனால், சமீப காலமாக பங்குச் சந்தையில் அதானி குழுமப் பங்குகள் உயர்ந்து வருகின்றன. இதையடுத்து, அவர் மீண்டும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார்.

இதையும் படிக்க:தோனி, கோலி, ரோகித் யாராலும் செய்ய முடியாத சாதனை! தனி ஒருவனாக சாதித்த தினேஷ் கார்த்திக்!