சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 10 ரூபாய் குறைப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை, சர்வதேச சந்தையில் சம்பந்தப்பட்ட பொருட்களின் விலையை சார்ந்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்படும் மானியம் சர்வதேச சந்தையின் ஏற்ற, இறக்கத்தை பொருத்தும், அரசின் முடிவின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படும்.
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருந்து வந்த நிலையில் சிலிண்டர் விலை தற்போது குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவையடுத்து சிலிண்டர் விலையை குறைப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று இந்தியன் ஆயில் அறிவிப்பு செய்துள்ளது.