இந்தியா

திருப்பதி அன்னதான திட்டத்திற்கு நிதிப் பற்றாக்குறை

webteam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்னதான அறக்கட்டளைக்கு வருவாய் குறைந்ததால் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

வங்கி டெபாசிட் வட்டி மூலம் கிடைக்கும் தொகையை சார்ந்து திருப்பதி கோயிலில் அன்னதானம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கி டெபாசிட்டுக்கான வட்டி 12 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் அன்னதான திட்டத்திற்கான வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. 
இதனை ஈடுகட்ட அறக்கட்டளை சார்பில் வங்கியில் செலுத்தப்பட்டுள்ள முதலீட்டு நிதியை பயன்படுத்திக்கொள்ள தேவஸ்தான நிதித்துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனர். ஆனால் இதற்கு அறக்கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேவஸ்தானத்தின் பல்வேறு துறைகளுக்கு அன்ன பிரசாத துறை 40 கோடி ரூபாய் வழங்க வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது.