இந்தியா

கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு அறிவிப்பு

கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாளை மறுதினம் முதல் இரண்டு வாரங்களுக்கு முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே அந்த மாநிலத்தில் உள்ள கட்டுப்பாடுகள், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பலனளிக்காத நிலையில், முழு முடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது, சில அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படுவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

காய்கறி, மளிகை ஆகிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில், மெட்ரோ ரயில் இயங்காது என்றும், அவசர தேவைக்கு மட்டும் டாக்சிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கேரளாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. மே 16 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.